மாமல்லபுரம் பேரூராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சென்மேரிஸ் தனியார் பள்ளி ஆகிய இரு இடங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து, நீண்ட வரிசையில் நின்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மாமல்லபுரம் பேரூராட்சியில், செயல் அலுவலராக ராஜேந்திரன் பொறுப்பேற்றதிலிருந்து இருந்து, கொரோனா 3வது அலை பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை எடுத்து, முக கவசம் அணியாமல் செல்லும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் உள்ளவர்களை கண்டறிந்து அபராதம் விதித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சென்மேரிஸ் தனியார் பள்ளி ஆகிய இரு இடங்களில் நேற்று நடந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வமாக கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டனர். மொத்தம் 730 பேருக்கு சதுரங்கப்பட்டினம் மருத்துவமனை மருத்துவர் கௌதமன் தலைமையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி, 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது.

Related Stories:

>