திருவள்ளூர் தொகுதியில் வீடு கட்டும் பயனாளிகள் 38 பேருக்கு பணி ஆணை: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் குடிசை மாற்று வாரியம் சார்பில் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் வீடு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் ஏழை எளியோர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் வீடுகள் ஒதுக்கீடு செய்தவர்களுக்கான பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி பூண்டி ஒன்றியம் அல்லிக்குழி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கலந்துகொண்டு தேர்வு செய்யப்பட்ட 38 பயனாளிகளுக்கு வீடு அமைக்கும் பணியை தொடங்குவதற்கான பணி ஆணைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய குழு துணைத் தலைவர் மகாலட்சுமி மோதிலால், திமுக நிர்வாகிகள் ப.சிட்டிபாபு, பிளேஸ்பாளையம் டில்லிபாபு என்கிற அசோக்குமார், ஊராட்சி தலைவர் சத்யநாராயணா, லிங்கேஷ் குமார், காஞ்சிப்பாடி சரவணன் கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: