×

பாக். எம்பிபிஎஸ் சீட்டுகளை விற்று தீவிரவாதம் ஹுரியத் அமைப்புகளுக்கு தடை ஒன்றிய அரசு தீவிர பரிசீலனை

ஸ்ரீநகர்: இந்தியாவில் இருந்து காஷ்மீரை பிரித்து தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று முழக்கத்துடன் ‘ஹுரியத் மாநாடு’ என்ற கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கடந்த 1993ம் ஆண்டில் 26 அமைப்புகள், பாகிஸ்தானை சேர்ந்த ஜமாத்-இ-இஸ்லாமி, ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மற்றும்  துக்தரன்-இ-மில்லத் போன்ற தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் இது தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு கடந்த 2005ம் ஆண்டு மிர்வைஸ் உமர் பாரூக், சையத் அலி ஷா கிலானி தலைமையில் 2 பிரிவுகளாக  உடைந்தது.  

ஜம்மு காஷ்மீரில் கடந்த 20 ஆண்டுகளாக பிரிவினைவாதத்தை தூண்டி வரும் இந்த 2 அமைப்புகளும், தீவிரவாத  அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில், பாகிஸ்தானில் உள்ள கல்வி நிறுவனங்களின் எம்பிபிஎஸ் இடங்களில் காஷ்மீர் மாணவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு இவற்றின் நிர்வாகிகள் சேர்த்தனர். இந்த பணத்தை தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி உதவியாக அளித்ததாக விசாரணையில் தெரிந்தது. மேலும், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிரிவினைவாத, பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதி அளிப்பதற்காக ஹவாலா உட்பட பல்வேறு சட்ட விரோத வழிகளில் உள்நாட்டிலும், வெளிநாடுகளில் இருந்து இவர்கள் நிதி திரட்டியதும் உறுதியானது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பாதுகாப்புப் படையினர் மீது கல்வீச்சு, பள்ளிகளை எரித்தல், பொதுச் சொத்துகளை சேதப்படுத்துதல் மற்றும் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பது போன்ற செயல்களுக்காக இந்த பணத்தை அவர்கள் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, ஹுரியத் மாநாட்டின் முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டமான ‘உபா’வின் கீழ், இந்த அமைப்புகளுக்கு தடை விதிப்பது பற்றி ஒன்றிய அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக பெயர் குறிப்பிட விரும்பாத உள்துறை அமைச்சக உயரதிகாரிகள் சிலர் கூறியுள்ளனர்.

* ஒரு சீட்டுக்கு ரூ.12 லட்சம்
ஒன்றிய உள்துறை அதிகாரிகள் மேலும், ‘பாகிஸ்தானில் ஒரு எம்பிபிஎஸ் சீட் வாங்குவதற்கு சராசரியாக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை செலவாகும். சில நேரங்களில் ஹுரியத் தலைவர்களின் தலையீட்டால் கட்டணம்  குறைக்கப்பட்டது,’ என்று தெரிவித்தனர்.

Tags : Bach ,U.S. government ,Hurriyat ,MBBS , Bach. The U.S. government is seriously considering banning extremist Hurriyat organizations from selling MBBS tickets
× RELATED பேரவையில் பாக். ஆதரவு கோஷம் காங்கிரஸ்...