செக்ஸ் வைத்துக்கொண்டால் கூடுதல் பலம் கிடைக்கும்: ஒலிம்பிக்கில் 3 தங்கம் வென்ற வீராங்கனை பேட்டி

மாஸ்கோ: ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீராங்கனை அல்லா சிஷ்கினா. இவர் அண்மையில் நடந்த ஒலிம்பிக் தொடரில் 3 தங்க பதக்கம் வென்றார். இந்நிலையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் உடலுறவு கொண்டதால் தனக்கு கூடுதல் பலம் கிடைத்து பதக்கம் வென்றேன் என தெரிவித்துள்ளார். நான் எப்போதும் மருத்துவ ஆராய்ச்சிகளை பெரிதும் நம்பி இருப்பேன். அறிவியல் ஆய்வுகள் என்ன சொல்கிறது என்றால் உங்களுக்கு அதீத சக்தி வேண்டுமென்றால் நீங்கள் உடலுறவு கொள்ள வேண்டும்.

உடலுறவு கொள்வது என்பது அவரவர் விருப்பம். உடலுறவு கொள்வதன் மூலம் அதற்கான பலன் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதனை நீங்கள் மேற்கொள்ளலாம். முக்கியமாக விளையாட்டு வீரர்களுக்கு உடலுறவு நல்ல பலனை கொடுக்கும். உடலுறவு மூலம் டெஸ்டோஸ்ட்ரோன் ஹார்மோன் செயல்பாடுகள் அதிகரிக்கும். தசை வலிமையை மட்டுமே நம்பி விளையாடப்படும் போட்டிகளுக்கு முழுவதும் உச்சம் தொடாத பாலுறவை மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும், என தெரிவித்துள்ளார்.

Related Stories:

More
>