×

மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார்: திமுக தலைமை அறிவிப்பு..!

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் ஒரு இடத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், செப்டம்பர் 13ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரான ஏ. முகமதுஜான் கடந்த மார்ச் மாதம் காலமானதை அடுத்து, காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தினம் ஆகஸ்ட் 31ம் தேதி என்றும் செப்டம்பர் 1ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும் என்றும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி செப்டம்பர் 3 என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு ஒரு எம்பி தேர்வு செய்யப்பட உள்ள நிலையில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவின் இணைச் செயலாளராக இருப்பவர் எம்.எம்.அப்துல்லா. திமுக பொதுக்குழு உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் என்பவர் குறிப்பிடத்தக்கது.

Tags : MM Abdullah ,DMK , State Elections, DMK, MM Abdullah, DMK Leadership, Announcement
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...