×

ஆப்கானிஸ்தானில் சிக்கிய 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காசியாபாத் வந்தடைந்தது இந்திய சிறப்பு விமானப்படை..!

டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகரம் காபூலில் இருந்து இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் இன்று காலை 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் கிளம்பியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் அந்நாட்டில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே காபூல் விமான நிலையத்தில் இருந்து 85 இந்தியர்கள் இந்திய விமானப்படை விமானம் மூலமாக துஷான்பே  விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கிருந்து அவர்கள் அனைவரும் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் காபூல் விமான நிலையத்தில் இருந்து 150 இந்தியர்களை தலிபான்கள் கடத்தி வைத்துள்ளதாக செய்திகள் வந்தன. இதனால் இந்தியர்களை மீட்டு வர ஒன்றிய அரசு துரிதமாக செயல்பட்டு வந்தது.
 
இதனையடுத்து, 107 இந்தியர்கள் உட்பட 168 பேருடன் காபூலில் இருந்து இந்திய விமானப்படை விமானம் புறப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் காத்திருந்த இந்தியர்கள் 107 பேர் தற்போது இந்திய விமானப்படை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு இன்று காலை 10 மணியளவில் காசியாபாத்தில் தரையிறக்கப்பட்டது.


Tags : Indian Special Air Force ,Ghaziabad ,Indians ,Afghanistan , Afghanistan, Indians, Indian Special Air Force
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை