×

கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் பாரம்பரிய நெல் நடும் பணி தீவிரம்

கூடலூர்: நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதியில் உள்ள மவுண்டாடன் செட்டி பழங்குடியின விவசாயிகள் பாரம்பரிய நெல்லான கெந்தகாசால், சீரக சால், அடக்கன், வாளி, பாரதி, மர நெல் உள்ளிட்ட பல்வேறு வகையான நெல் வகைகள் பயிரிட்டு வந்துள்ளன. தற்போது நெல் விவசாயம் குறைந்து போனதால் ஒரு சில குறிப்பிட்ட ரக பாரம்பரிய நெல் வகைகள் மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றன. பெரும்பாலும் விற்பனைக்காக அல்லாமல் தங்களது சொந்த தேவைகளுக்காக விவசாயிகள் நெல் விவசாயத்தில் ஈடுபடுகின்றனர்.

பருவமழை துவங்கியதும் ஆடி மாதத்தில் நாற்றங்காலில் விதைத்து பின்னர் வயல்களை தயார் செய்து நாற்று நடவு செய்கின்றனர்.
நெல் நாற்றுகளில் கதிர்கள் உருவாகும் ஐப்பசி மாதத்தில் பழங்குடி இன மக்களின் பொது குலதெய்வமான வேட்டைக்கருமகன் கோயிலுக்கு முதல் பால் கதிர்களை காணிக்கையாக்கி பின்னர் தங்களது கிராமங்களில் உள்ள குல தெய்வங்களுக்கு பூஜை செய்வது இவர்களது பாரம்பரிய வழக்கம். இதன் பின்னரே வயல்களில் அறுவடை பணிகளை துவக்குவார்கள். கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளான புத்தூர் வயல், அல்லூர் வயல், குனில் வயல், புளியம்பாறை, பாடந்துரை, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த பாரம்பரிய நெல் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags : Kudalur Circular Area , Cuddalore, surrounding, paddy planting, work
× RELATED தமிழ்நாடு தலைமை செயலக சங்க கோரிக்கை...