ராஜிவ் காந்தி பிறந்தநாள் விழா

காஞ்சிபுரம்: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு அவரது படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். காஞ்சிபுரம் காந்தி ரோடு, காமராஜர் சிலை அருகில் இந்திய தேசிய கிராம தொழிலாளர் சம்மேளன மாவட்ட தலைவர் அவளூர் சீனிவாசன் தலைமையில், ராஜிவ் காந்தி  படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட செயலாளர் குமார், முன்னாள் மாவட்ட பொதுச் செயலாளர் லோகநாதன், வக்கில் தசரதசா, சுப்பிரமணி முதலியார், சுந்தரம், தம்பிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், காங்கிரஸ் கட்சி நகர தலைவர் சுரேஷ்குமார் (எ) நாதன் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து, ராஜிவ் காந்தி படத்துக்கு மலர் தூவி,மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட துணைத்தலைவர் தாரன், மாநில நிர்வாகிகள் பத்மநாபன், லியாகத் செரீப், மாவட்ட நிர்வாகிகள் சாதிக் பாஷா, ஆட்டோ ரவி, இளைஞர் அணி யோகானந்தம், மகளிர் அணி அமுலு, அன்பு, குணா, கலில் பாய், முத்துக்குமார், வெற்றி செல்வராஜ், கமல்தாஸ், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>