×

காவலர் குடியிருப்புகளில் எஸ்பி திடீர் ஆய்வு

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் உள்ள காவலர் குடியிருப்புகளில் எஸ்.பி எம்.சுதாகர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். காஞ்சிபுரம் உட்கோட்டத்தில் உள்ள, சிவகாஞ்சி, விஷ்ணு காஞ்சி, காஞ்சி தாலுகா ஆகிய காவலர் குடியிருப்புகளில் சுமார் 200 காவலர் குடும்பத்தினர் வசிக்கின்றனர். சமீபத்தில் சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள குடியிருப்புகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அரசு சார்பில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் காவலர் குடியிருப்புகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து எஸ்பி எம்.சுதாகர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது  காவலர் குடும்பத்தினரின்  குறைகளை கேட்டறிந்த அவரிடம், தண்ணீரை சுத்தம் செய்து க்ளோரின் போடவேண்டும், மின்விளக்கு சரிசெய்தல் உள்பட அடிப்படை வசதிகள் குறித்து பெண்கள் கூறினர். அதற்கு, உடனுக்குடன் அதை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

இதுவரை யாரும் காவலர் குடியிருப்புக்கு சென்று குறைகளை கேட்டதில்லை. ஆனால் காஞ்சிபுரம் எஸ்பி எம்.சுதாகர், நேரடியாக சென்று அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டதால், காவலர் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்தனர். இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் எஸ்பி முருகன், இன்ஸ்பெக்டர்கள் ராஜகோபால், சுந்தர்ராஜி, சிவக்குமார் ஆகியோர் இருந்தனர்.

Tags : SP , Police Station, SP, Inspection
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்