புயல் பாதுகாப்பு மையத்தில் அடிப்படை வசதிகள்: அதிகாரிகள் ஆய்வு

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் புயல் பாதுகாப்பு மையம், பஸ் நிலையத்தில் சேதமடைந்த இருக்கைகளை ஆகியவற்றை திருக்கழுக்குன்றம் தாசில்தார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் ஆகியோர் ஆய்வு செய்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பேரூராட்சி தேவனேரி, இசிஆர் சாலை, வெண்புருஷம், எடையூர் ஊராட்சி, கொக்கிலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் குடிநீர், மின்சார, கழிப்பறை ஆகிய வசதிகள் குறித்து திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதையடுத்து, பேரூராட்சிகள் உதவி இயக்குநர், மாமல்லபுரம் பஸ் நிலையம் சென்று பயணிகள் அமரும் இருக்கைகளை பார்வையிட்டு, சேதமடைந்த இருக்கைகளை உடனே மாற்றி அமைத்து முறையாக பராமரிக்க வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், மாமல்லபுரம் பஸ் நிலையத்தில், சுற்றுலா பயணிகள் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட நவீன கட்டண கழிப்பறையை பார்வையிட்டு கழிப்பறைகளுக்கு, தனித்தனி வழி அமைத்து கதவுகள் பொறுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். தொடர்ந்து, பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டார். அப்போது, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜேந்திரன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், துப்புரவு ஆய்வாளர் ரகுபதி, துப்புரவு மேற்பார்வையாளர் தாமோதரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

>