ரூ.2 கோடியில் அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றி திறப்பு: வரலட்சுமி மதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

செங்கல்பட்டு: அதிக திறன் கொண்ட புதிய மின்மாற்றியை செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் திறந்து வைத்தார். தமிழ்நாடு மின்சார வாரியம்  செங்கல்பட்டு மின்பகிர்மான வட்டம் சார்பில், செங்கல்பட்டு வேதாச்சலம் நகரில் புதிய துணை மின்நிலைய கட்டிடம் மற்றும் 11 (கேவி)  பிரேக்கர் திறப்பு விழா செங்கல்பட்டு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. மேற்பார்வை பொறியாளர் மணிமேகலை தலைமை வகித்தார்.

செங்கல்பட்டு மின்வாரிய செயற்பொறியாளர்  மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் கலந்துகொண்டு ரூ.2.5 கோடியில் அமைக்கப்பட்ட  11 (கிவோ) பிரேக்கர் மற்றும் புதிய கட்டிடத்தை திறந்துவைத்தார். புதிதாக திறக்கப்பட்ட 11 கிவோ பிரேக்கர் மின்மாற்றியால், செங்கல்பட்டு நகரில் உள்ள ஜிஎஸ்டி சாலை,  ராஜாஜி தெரு, வேதாச்சலம் நகர், அண்ணாசாலை உள்பட பல  பகுதிகளில் உள்ள 20 ஆயிரம் மின் நுகர்வோர்கள் பயனடைவார்கள் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் செங்கல்பட்டு நகர திமுக செயலாளர் எஸ்.நரேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: