×

ஆந்திராவில் பரபரப்பு மலை உச்சியில் இருந்து தவறி விழுந்த பூசாரி பலி

திருமலை: மலை உச்சியில் பூஜை செய்த பூசாரி கால் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், அனந்தபுரம் மாவட்டம் சிங்கனமாலா வனப்பகுதியில் மலை உச்சியில் கம்பமல்லையா சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் தெலுங்கில் சிராவன(ஆவணி) மாதத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையை காண்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர். அதன்படி, நேற்று காலை நடந்த பூஜையை காண பக்தர்கள் பாதை இல்லாவிட்டாலும் பக்தியால் நடந்து சென்று தரிசனம் செய்து வந்தனர்.

மலை உச்சியில் இருந்தபடி பூசாரி பாப்பைய்யா என்பவர் பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென கால் தவறி மலை உச்சியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். பக்தர்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே பூசாரி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை மலை மீது ஏற முடியாமல் கீழே நின்று கொண்டு வீடியோ எடுத்தபடி தரிசனம் செய்த பக்தர்கள் தங்களது செல்போனில் பதிவு செய்தனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Andhra, mountain top, priest, killed
× RELATED ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய பிரஜ்வல்...