×

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல் வீசி தாக்கி விரட்டியடிப்பு: இலங்கை ரோந்து கப்பல் மோதி படகு சேதம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்களை கல்வீசி தாக்கி விரட்டியடித்த இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதியதில், விசைப்படகின் பின்பகுதி உடைந்தது. ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் நேற்று காலை மீனவர்கள் பாக்ஜலசந்தி கடலில் மீன்பிடிக்க சென்றனர். நேற்று மாலை 100க்கும் மேற்பட்ட படகுகளில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். மாலை 4 மணியளவில் இலங்கை கடற்படைக்கு சொந்தமான கன்போட் கப்பலில் ரோந்து வந்த கடற்படையினர், அப்பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த படகுகளை வழிமறித்து நிறுத்தியதுடன் மீனவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர்.

இதனால் படகுகளை வேறு பகுதிக்கு மீனவர்கள் ஓட்டிச் சென்றனர். மீனவர்களை எச்சரித்த கடற்படையினர் திரும்பி சென்ற படகுகளை தொடர்ந்து வந்து ரோந்து கப்பலால் மோதினர். இதில் தங்கச்சிமடம் மீனவர் கிங்ஸ்டன் படகின் பின்பகுதி பலகை உடைந்து சேதமடைந்தது. படகு உடைந்ததால் படகினுள் கடல் நீர் செல்லத் துவங்கியது. உடனடியாக படகை கரையை நோக்கி செலுத்தி இரவு 7 மணியளவில் ராமேஸ்வரம் கடற்கரையை வந்தடைந்தார்.


Tags : Rameswaram , Rameswaram fishermen, stone throwing attack, Sri Lankan patrol vessel
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...