ஆதரவற்றவர்களை அரவணைக்கும் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை: 65க்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை; டீன் தகவல்

சென்னை: சென்னையில் மனநலம் பாதிக்கப்பட்டு சாலையில் சுற்றித்திரிப்பவர்களை  மீட்டு சிகிச்சையளிக்க சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு சிகிச்சை பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஆதரவற்றவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் முற்றிலும் குணமடைந்தவுடன் அவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களை அழைத்து செல்ல யாரும் வரவில்லை என்றால் முதியோர் இல்லம் மற்றும் ஆதரவற்ற இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ராஜிவ்காந்தி மருத்துவமனை டீன் டாக்டர் தேரணிராஜன் கூறுகையில், ‘மனநலம் பாதிக்கப்பட்டு ஆதரவற்ற நிலையில் சாலைகளில் சுற்றத் திரிபவர்களை தன்னார்வலர்கள் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தினம் ஒன்று, இரண்டு பேரை கொண்டுவந்து இங்கு சேர்த்து விட்டு செல்கின்றனர். அவர்களை முழுவதும் குணப்படுத்தி அனுப்ப வேண்டும் என்பதற்காக இந்த மறுவாழ்வு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக் கொள்ளும் வகையில் 30க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள், பணிகள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த நிலையில் அவர்களுடைய உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். தொடர்ந்து இது போன்று உள்ளவர்களுக்கு தரமான  சிகிச்சை அளித்து  முழுமையாக குணப்படுத்தி நல்ல முறையில் அனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

குடும்பத்துடன் இணைந்த 9 பேர்

மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் குணமடைந்தவர்கள் அவர்களின் குடும்பத்துடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதன்படி டெல்லியை சேர்ந்த ஒருவர் என 9 பேரை குடும்பத்தினருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 15 பேர் நன்றாக இருப்பதால் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது 65க்கும் மேற்ப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தினமும் ஒன்று, இரண்டு வந்து கொண்ேட தான் இருக்கின்றனர். அவர்களுக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories:

>