×

தாலிபான்களுடன் ஒன்றிணைந்து செயல்பட தயார்..தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க உதவி செய்வோம்!: பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவிப்பு..!!

லண்டன்: ஆப்கானிஸ்தானில் தேவைப்படும் பட்சத்தில் தாலிபான்கள் அரசுடன் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பிரிட்டன் அரசு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அங்கு புதிய அரசை அமைக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதில், ஜனநாயக ஆட்சியாக இருக்கப்போவதில்லை என்று கூறிவிட்ட தாலிபான்கள், இஸ்லாமிய ஷரியத் சட்டப்படியே ஆப்கானில் ஆட்சி நடைபெறும் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

இதனால் ஆப்கானில் மட்டுமல்லாமல் அண்டை நாடுகளையும் பதற்றம் தொற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் செய்தியாளர்களிடையே பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், ஆப்கானில் இருந்து வெளியேற மக்கள் முயன்றதால் ஏற்பட்ட பதற்றம் சற்று தனித்துள்ளதாக கூறினார். ஆப்கான் பிரச்சனைக்கு தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தாலிபான்களுக்கு உதவி செய்வோம் என்றும் போரிஸ் கூறியுள்ளார்.

ஆப்கானில் இருந்து இதுவரை 1,615 பிரிட்டன் நாட்டவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக போரிஸ் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மீண்டும் தீவிரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறியிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், தற்போது தாலிபான்களுடன் கைகோர்க்க தயாராகி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.


Tags : Taliban ,Boris Johnson , Taliban, aide, British Prime Minister Boris Johnson
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...