×

குன்னூர் வைகையாற்றில் பாசனத்தை பாழாக்குது ஆகாயத்தாமரை

தேனி: தேனி அருகே குன்னூர் வைகை ஆற்றில் ஆகாயத் தாமரை அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தண்ணீர் மாசுபடியும் அவலம் உள்ளது. தேனி அருகே குன்னூரில் வைகை ஆறு உள்ளது. வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியாகவும் இந்த வைகை ஆறு உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை தாண்டும்போது, குன்னூர் வைகையாற்றில் தண்ணீர் கடந்து செல்ல வழியில்லாமல் வைகை அணையின் நீ்ர்ப்பிடிப்பு பகுதியாக மாறி விடுகிறது. இதனால், வைகை அணையில் நீர்மட்டம் உயரும்போது, குன்னூர் வைகையாற்றில் தண்ணீா தேங்கி நிற்கிறது. தற்போது, வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் குன்னூர் வைகையாற்றில் தண்ணீர் தேங்கியுள்ளது.

குன்னூர் வைகை ஆற்றின் நடுவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை மூலம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ஏராளமான கிராமங்களுக்கு உறைகிணறுகள் அமைத்து இங்கிருந்து தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குன்னூர் வைகை ஆற்றின் நடுவே பரவலாக ஆகாயத்தாமரை படர்ந்துள்ளது. இத்தகைய ஆகாயத்தாமரையானது தண்ணீரை மாசுபடுத்தும் தன்மை கொண்டது. மேலும், ஆற்றில் உள்ள மீன் உள்ளிட்டவற்றை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே, பொதுப்பணித் துறை நிர்வாகம் ஆற்றில் பரவியுள்ள ஆகாயத் தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Coonoor Vaigai , Destroys irrigation in Coonoor Vaigai
× RELATED குன்னூர் வைகை ஆற்றில் மணல் திருட்டு...