×

அமெரிக்காவுக்கு உதவிய ஆப்கானியர்களை தேடும் தாலிபான்கள்!: கூண்டோடு பிடித்து கடும் தண்டனை விதிக்க திட்டம்..பீதியில் ஆப்கான் ஊழியர்கள்..!!

காபூல்: ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு படைகளுக்கு உதவிய ஆப்கானியர்களை கண்டுபிடித்து தண்டனை அளிக்க தாலிபான்கள் தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர். அமைதி வழியில் பயணிக்க இருப்பதாக ஊடகங்களுக்கு முன்பாக தாலிபான்கள் பேசினாலும் பழிவாங்கும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்துகொண்டு தான் உள்ளனர். தங்களுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட ஊடகவியலாளர்கள், அமெரிக்க படைகளுக்கு உதவியவர்கள், நேட்டோ படையில் பணியாற்றியவர்கள், ஒலிபெயர்ப்பாளர்கள் என தாலிபான்கள் பட்டியல் போட்டு வேட்டையாட தொடங்கியுள்ளனர்.

அவர்களை கண்டுபிடிக்க ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதள பக்கங்களையும் அவர்கள் பயன்படுத்துகின்றனர். அமெரிக்கா, நேட்டோ படைகள் தங்களுடன் தொடர்பில் இருந்த ஆப்கான் மக்களின் பயோமெட்ரிக் தரவுகளான கைரேகை, விழித்தரை மற்றும் புகைப்படங்களை கையடக்க கருவிகளில் சேமித்து வைத்திருந்தது. இந்த கணினி அடிப்படையிலான கையடக்க கருவிகளை தாலிபான்கள் கைப்பற்றி இருக்கின்றன.

இதையடுத்து வீடு வீடாக சோதனை நடத்தி வரும் தாலிபான்கள், அதில் உள்ள பயோமெட்ரிக் அடையாளங்களை வைத்து அமெரிக்கா, நேட்டோ படைகளுக்கு உதவியவர்கள் மற்றும் தங்கள் கொள்கைகளுக்கு எதிரான ஊடகவியலாளர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். ஜெர்மனியை சேர்ந்த தொலைக்காட்சி செய்தியாளர் தாயுஸ் வில்லே என்பவரை அடையாளம் கண்டு சென்ற தாலிபான்கள், அவர் தப்பி சென்றுவிட்டதால் அவரது உறவினரை சுட்டு கொன்றுள்ளனர்.


Tags : Taliban ,Afghans ,United States , America, the Taliban, punishment
× RELATED அமெரிக்காவில் ரோபோ நாய் அறிமுகம்…!!