×

நகரி- திண்டிவனம் ரயில் பாதை பணிகள் பாதியில் நின்றதால் ராணிப்பேட்டை பாலாறு புதிய ரயில்வே மேம்பாலத்தில் தடுப்பு பைப்புகள் திருட்டு: மர்ம ஆசாமிகள் கைவரிசை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை பாலாற்றில் திண்டிவனம்- நகரி இடையே ரயிலுக்காக அமைக்கப்பட்ட  பாலத்தின் மீது உள்ள இரும்புக் கம்பிகளை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். ராணிப்பேட்டை பாலாற்றில் கடந்த 2006ம் ஆண்டில் மத்திய அரசு ₹582.83 கோடி மதிப்பீட்டில் நகரி முதல் திண்டிவனம் வரை 184.45 கிலோ மீட்டர் தூரத்திற்கான புதிய ரயில் பாதை திட்டப் பணிகளை வேக வேகமாக துவக்கியது. இதில் நகரி, ஆர்.கே.பேட்டை, சோளிங்கர், வாலாஜா, ராணிப்பேட்டை, ஆற்காடு, விளாப்பாக்கம், திமிரி, களம்பூர், கஸ்தம்பாடி, ஆரணி, செய்யார், வந்தவாசி, திண்டிவனம் வரை புதிய ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள், சிறுபாலங்கள், ஆற்றுப்பாலங்கள், அலுவலகங்கள், அதிகாரிகளின் குடியிருப்பு கட்டிடங்கள் என தடபுடலான பணிகள் வேகவேமாக துவக்கப்பட்டன.

இதனால் நகரி முதல் திண்டிவனம் வரை ரயிலே பார்க்காத பல்லாயிரக்கணக்கான கிராம மக்கள் எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தனர். மேலும் இந்த நகரி திண்டிவனம் புதிய ரயில் பாைத திட்ட பணிக்காக ₹35 கோடியில் ராணிப்பேட்டை- ஆற்காடு பாலாற்றின் நடுவில் புதிய ரயில்வே மேம்பாலமும் கட்டி முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. ஆனால் தற்போது ராணிப்பேட்டை- ஆற்காடு பாலாற்றின் நடுவில் கட்டப்பட்ட பதிய ரயில்வே மேம்பாலத்தின் இடது புறம் அதாவது மக்கள் பாதுகாப்பாக பாலாற்றிலிருந்து கீழே விழாமல் இருக்க நடந்து செல்லும் பாதையுடன் அதன் பாதுகாப்புக்காக இரும்பு தடுப்புகள் பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டது. தற்போது இந்த இரும்பு தடுப்பு பைப்புகளை தினமும் அங்கு அமர்ந்து குடிக்கும் சில மதுப்பிரியர்கள் மற்றும் மர்ம நபர்களால் திருடு போய்கொண்டிருக்கிறன.

ஆங்காங்கே பைப்புகளை பெயர்த்தும் மேலும் அறுக்கப்பட்டும் திருடப்பட்டும் இருக்கின்றன. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட ரயில்வே துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதனை உடனடியாக ஆய்வு செய்து திருட்டு கும்பல்மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இனிமேல் திருட்டு போகாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜா நகரங்களைச் சேர்ந்த பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Nagari ,Tindivanam , Nagari-Tindivanam railway line works halted
× RELATED வந்தவாசி ஒன்றியத்தில் தீவிர வாக்கு...