ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகள் அருகே அட்லாண்டிக் கடலில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து: 52 பேர் பலி?

மாட்ரிட்: ஸ்பெயினில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 52 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்க நாடான ஐவரிகோஸ்ட்டில் இருந்து 53 பேருடன் அட்லாண்டிக் கடல் வழியே ஸ்பெயினை நோக்கி படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த படகு ஸ்பெயின் நாட்டின் ஹனரி தீவுகளுக்கு 220 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் பயணம் செய்திகொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. நீண்ட நேரத்திற்கு பிறகு விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்புப் படையினர் படகின் உடைந்த பாகங்களை பிடித்தபடி தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

கடலில் சடலங்களுக்கு மத்தியில் பெண் மீட்கப்பட்டதாகவும், ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எஞ்சிய 52 பேரும் கடலில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்ன ஆனது என்பது குறித்து விசாரணை நடத்தி வரும் ஸ்பெயின் கடற்படையினர் மாயமானவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த பல மணி நேரம் ஆனதால் கடலில் மூழ்கிய 52 அகதிகளும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக கனேரி தீவுகளை கடக்க முயன்ற படகு மோசமான வானிலை காரணமாக விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

Related Stories: