ஓணம் பண்டிகை தினத்தன்று ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்: சென்னை ரயில்வே கோட்டம் அறிவிப்பு

சென்னை: ஓணம் பண்டிகை தினத்தன்று ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது என்று சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: தெற்கு ரயில்வே, சென்னை கோட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களும், ஓணம் பண்டிகை தினமான 21ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படி காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே இயங்கும். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஞாயிற்றுக் கிழமைகளில் கூடுதல் பணியாளர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதன்படி சென்னை கடற்கரை- ஆவடி இடையே 2 சேவைகள், ஆவடி- சென்ைன கடற்கரை இடையே 2 சேவைகள், சென்னை கடற்கரை- திருவள்ளூர் இடையே 6 சேவைகள், திருவள்ளூர்- சென்னை கடற்கரை இடையே 6 சேவைகள், மூர்மார்க்கெட்- திருத்தணி இடையே 2 சேவைகள், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே 2 சேவைகள் என 165 சேவைகள் இயக்கப்பட்ட நிலையில் 185 சேவைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>