தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஆணையத்தின் கால அவகாசம் 6 மாதம் நீட்டிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது 2018 மே 22ம் தேதி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்த உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி அருணா ஜெகதீசன் பொதுமக்கள், அரசு ஊழியர்கள், பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வந்தார். இந்த விசாரணைக்கு வழங்கப்பட்ட காலஅவகாசம் நாளையுடன் (ஆகஸ்டு 22ம் தேதி) முடிவடைகிறது.

இந்நிலையில், விசாரணை முழுஅளவில் முடியாததால் விசாரணை ஆணையத்திற்கு மேலும் ஒரு ஆண்டு கால அவகாசம் வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை பரிசீலித்து, ஆகஸ்டு 22ம் தேதி முதல் 22-2-2022 வரை மேலும் 6 மாத கால அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>