திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமி நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்தநிலையில், ஆவணி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் இன்று இரவு 7.19 மணிக்கு தொடங்கி, நாளை மாலை 6.17 மணிக்கு நிறைவடைகிறது. தொடர்ந்து இந்த மாதமும் கிரிவலம் செல்ல தடை செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் பா.முருகேஷ் அறிவித்துள்ளார். எனவே, திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல பக்தர்கள் யாரும் வர வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories: