குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் போத்தீஸ் ஸ்வர்ண மஹால் திறப்பு

சென்னை: போத்தீஸ் தனது 17வது கிளையான ‘போத்தீஸ் ஸ்வர்ண மஹால்’ என்ற புதிய தங்க நகை ரீட்டெய்ல் ஷோரூம் மற்றும் ஜவுளிக்கடையை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் நேற்று திறந்தது. லேட்டஸ்ட் கலெக்‌ஷனில் தங்கம், வெள்ளி, வைர கற்கள் மற்றும் பிளாட்டினத்திற்கு தனித்தனி ஷாப்பிங் பிரிவுகள் இங்கு இடம் பெற்றுள்ளன. மேலும், கவர்ச்சிகரமான எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மற்றும் தங்கம் சேமிக்கும் திட்டங்கள் ஆகியவை உள்ளன. திருமணம் மற்றும் அனைத்து விழாக்களுக்கும், அனைவருக்குமான ஆடைகள் ஒரே வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.

இதுகுறித்து போத்தீஸ் நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில், ‘போத்தீஸ் ஸ்வர்ண மஹால் ஷோரூமில் மாபெரும் பட்டுப் பிரிவு, தங்கம், வெள்ளி, வைர கற்கள் மற்றும் பிளாட்டினத்திற்கு தனித்தனி பிரிவு. ஒவ்வொரு தளத்திலும் வெவ்வேறு கலெக்‌ஷன்கள் உள்ளன. கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு கட்டணமில்லா பார்க்கிங் வசதி. கிரீன் கார்ட் திட்டம். வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி திட்டம். புட் கோர்ட், புட்வேர், பர்னிஷிங் மெட்டீரியல் கொண்ட மல்ட்டி லெவல் ஷோரும், மளிகை மற்றும் காய்கனிகளுக்கு தனித்தளம். மிகக்குறைந்த விலையில் காஸ்மெட்டிக், லேடீஸ் ஹாண்ட் பேக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்கள், மொபைல்ஸ் மற்றும் இதர எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இடம் பெற்றுள்ளன. இது வாடிக்கையாளர்களுக்கு உலகத்தர ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும்’ என்றார்.

Related Stories:

More
>