கொரோனா பாதிப்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை சரிந்தது

புதுடெல்லி: கடந்த 150 நாட்களில் இல்லாத அளவுக்கு கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.   நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி எண்ணிக்கையை ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36,571 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியே 23 லட்சத்து 58 ஆயிரத்து 829 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 540 பேர் இறந்துள்ளனர்.

இதனால், பலி எண்ணிக்கை 4 லட்சத்து 33 ஆயிதர்து 589 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 3 லட்சத்து 63 ஆயிரத்து 605 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.  இது, கடந்த 150 நாட்களில் இல்லாத அளவுக்கான குறைந்த எண்ணிக்கையாகும். கடந்த 2020 மார்ச் மாதத்திற்குப் பிறகு மொத்த தொற்று விகிதம் 1.12 சதவீதமாக சரிந்துள்ளது. இதுவரை 57.22 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Related Stories:

>