×

டிவிட்டரை தொடர்ந்து பேஸ்புக்கில் ராகுலின் சர்ச்சை பதிவு நீக்கம்

புதுடெல்லி: டெல்லியில் கடந்த 1ம் தேதி 9 வயது சிறுமியை கும்பல் ஒன்று பாலியல் பலாத்காரம் செய்து ெகான்றது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறுமியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அவர்களின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.  பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர், அவர்களின் குடும்பத்தினரின் புகைப்படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம். இதனால், அவரது கணக்கை டிவிட்டர் நிர்வாகம் முடக்கியது. பின்னர், மீண்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அளித்த புகாரால் பேஸ்புக், இன்ஸ்டாகிராமிலும் ராகுலின் இந்த பதிவு நேற்று நீக்கப்பட்டது. ‘சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு கடந்த வாரத்தில் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனாலும், பதிவு நீக்கப்படவில்லை. எனவே, விதிமீறல் காரணமாக குறிப்பிட்ட பதிவு நீக்கப்படுகிறது’ என்று பேஸ்புக்கின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Tags : Rahul ,Facebook ,Twitter , Twitter, Facebook, Rahul Gandhi
× RELATED அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்