உலக கோப்பை டி.20யில் ஆஸி. கடும் சவால் அளிக்கும்: மெக்கல்லம் கணிப்பு

வெலிங்டன்: 7வது ஐசிசி டி.20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 17ம் தேதி முதல் நவம்பர் 14ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 15 பேர் கொண்ட அணியையும் அறிவித்துள்ளன. இந்நிலையில் நியூசிலாந்து முன்னாள் வீரரான பிரெண்டன் மெக்கல்லம் தனது டுவிட்டரில், ``இந்த டி20 உலக கோப்பை தொடரில் எதிர் அணிகளுக்கு மிகவும் கடுமையான போராட்டத்தை கொடுக்கும் அணியாக ஆஸ்திரேலிய அணியை குறிப்பிட்டுள்ளார்.

இந்த டீம் ஷார்ப்பான டீம். அவர்களுடைய பழைய போட்டிகளில் ஏற்பட்ட சறுக்கல்களை எல்லாம் மறந்துவிட்டு பார்த்தால் நிச்சயம் ஆஸ்திரேலிய அணி ஒரு கடினமான அணி. ஆகவே இந்த டி20 உலக கோப்பை தொடரில் மற்ற அணிகளுக்கு ஆஸ்திரேலியா கடுமையான போட்டியளிக்கும். ஜோஷ் இங்கிலீஸ் ஒரு நல்ல திறமையான பிளேயர்’’ என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>