×

வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் டென்னிஸ் ஓபன்: காலிறுதியில் ஸ்வரெவ், பிளிஸ்கோவா

சின்சினாட்டி: சின்சினாட்டியில் நடந்து வரும் வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் டென்னிஸ் ஓபன் போட்டி தொடரில் ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு அலெக்சாண்டர் ஸ்வரெவ், டேனில் மெட்வடேவ் முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு ஆஷ்லீ பார்டி, கரோலினா பிளிஸ்கோவா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று காலை நடந்த காலிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டியில் நார்வேயின் இளம் வீரர் காஸ்பர் ரூட், அர்ஜென்டினாவின் டீகோ ஸ்வார்ட்ஸ்மேனை 6-4, 6-3 என நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரெவ், அர்ஜென்டினா வீரர் குய்டோ பெல்லாவை 6-2, 6-3 என நேர் செட்களில் எளிதாக வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

இத்தாலி வீரர் லொரென்சோ சொனேகோவை 5-7, 6-3, 6-4 என 3 செட்களில் போராடி வீழ்த்திய கிரீஸ் வீரர் ஸ்டெஃபனாஸ் சிட்சிபாசும், காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். ரஷ்ய வீரர்கள் டேனில் மெட்வடேவ் மற்றும் ஆண்ட்ரே ரப்லெவ், ஸ்பெயினின் பாப்லோ காரெனோ பஸ்டா, பிரான்சின் பெனாய்ட் பேர் ஆகியோரும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லீ பார்டி, பெலாரசின் முன்னணி வீராங்கனை விக்டோரியா அசரென்காவை 6-0, 6-2 என வீழ்த்தி, காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். ஜப்பானின் முன்னணி நட்சத்திரம் நவோமி ஒசாகாவை, ஸ்விட்சர்லாந்தின் ஜில் டெய்க்மான் 3-6, 6-3, 6-3 என 3 செட்களில் வீழ்த்தி, அதிர்ச்சி கொடுத்தார்.

முன்னணி வீராங்கனைகள் ஜெர்மனியின் ஆங்கிலிக் கெர்பர், ஸ்பெயினின் பாலா படோசா ஆகியோரும் மகளிர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். நடப்பு வெஸ்டர்ன் அண்ட் சதர்ன் டென்னிஸ் காலிறுதிக்கு செக். குடியரசை சேர்ந்த 3 வீராங்கனைகள் முன்னேறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை 6-4, 7-6 என 2 செட்களில் வீழ்த்தி, பழி தீர்த்துக் கொண்டார். மற்றொரு வீராங்கனை கிரஜ்சிகோவா, ஸ்பெயினின் காப்ரின் முகுருசாவை 6-1, 6-7, 6-2 என 3 செட்களில் வீழ்த்தினார். பெட்ரா க்விடோவா, துனிசியாவின் ஆன்ஸ் ஜாபெரை 6-1, 6-2 என நேர் செட்களில் வீழ்த்தினார்.

Tags : Western and Southern Tennis Open ,Swarovski ,Bliskova , Western and Southern Tennis Open: Swarovski, Bliskova in quarterfinals
× RELATED கனடா ஓபன் டென்னிஸ் காலிறுதியில் கரோலினா பிளிஸ்கோவா