×

ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

சென்னை: சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளியில் படித்த மாணவி ஒரவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளனர். போக்சோ சட்டம் உள்பட 5 பரிவுகளில் ராஜகோபாலன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறார் வண்கொடுமை தடுப்புச் சட்டமான போக்சோ உட்பட 5 பரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாணிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மற்றும் தகவல்தொழில்நுட்ப சட்டப்பரிவுன் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் எழும்பூர் நீதிமன்ற நீதிபதி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பள்ளியில் படித்த மாணவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக பேலி பாலியல் தொல்லை தருவதாக எழுந்த புகாரில் ராஜகோபாலன் நேற்று கைது செய்யப்பட்டார். 

The post ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை: ஆசிரியர் ராஜகோபாலன் மீது 5 பரிவுகளின் கீழ் வழக்கு பதிவு appeared first on Dinakaran.

Tags : Rajagobalan ,Chennai ,Chennai Padma Seshadri School ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...