×

உலக கோப்பை டி20 ஆஸி. அணி அறிவிப்பு

உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி   அக்டோபர் 17ம் தேதி ஏமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில்  தொடங்குகிறது. இந்நிலையில் உலக கோப்பைக்கான அணியை முதல் நாடாக ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. கொரோனா பரவலால் விலகியிருந்த, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேச சுற்றுப்பயணங்களின் போது ஓய்வில் இருந்த எல்லா வீரர்கள் மீண்டும்  15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ளனர். அவர்களை தவிர டேனியல் கிறிஸ்டியன், டேனியல் சாம்ஸ், நாடன் எல்லிஸ் என 3 வீரர்கள் ரிசர்வ் ஆட்டக்காரர்களாக  அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அணி விவரம்: ஆரோன் பிஞ்ச்(கேப்டன்),  பேட் கம்மின்ஸ்(துணை கேப்டன்),  ஆஷ்டன் அகர், ஜோஷ் ஹசல்வுட், ஜோஷ் இங்லிஸ்,  மிட்செல் மார்ஷ், கிளென் மாக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், ஸ்டீவ் ஸ்மித், மிட்செல் ஸ்டார்க், மார்கஸ் ஸ்டொய்னிஸ், மேத்யூ வேடு(விக்கெட் கீப்பர்), டேவிட் வார்னர், ஆடம் ஸம்பா, மிச்செட்சல்  ஸ்வெப்சன்.

Tags : Aussies ,D20 ,World Cup , World Cup, Australian team, announcement
× RELATED 20 அணிகள் பங்கேற்கும் டி.20 உலக கோப்பை...