தொடரை வெல்ல வெ.இண்டீஸ் தீவிரம்

கிங்ஸ்டன்: வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் முதலில்  4 ஆட்டங்களை கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடியது. அதில் ஒரு ஆட்டத்தில் பாக் போராடி வெல்ல, மீதி 3 ஆட்டங்கள் மழையால் கைவிடப்பட்டன.  அதனால் பாக் டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து 2 டெஸ்ட் ஆட்டங்களை கொண்ட தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகின்றன. கிங்ஸ்டன்னில் நடந்த முதல் டெஸ்ட்டில் வெ.இண்டீஸ் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.  இந்நிலையில் இந்த 2 அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் ஆட்டமும் அதே கிங்ஸ்டன்னில்  இன்று தொடங்குகிறது.

இந்த டெஸ்ட்டில் வெல்வது அல்லது டிரா செய்வதின் மூலம்  தொடரை வெ.இண்டீஸ் கைப்பற்றும். கூடவே டி20 தொடரை இழந்ததற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதால் கிரெய்க் பிரத்வைட் தலையிலான வெ.இண்டீஸ் வெற்றிக்கு முனைப்புக் காட்டும். அதேநேரத்தில்  இந்த டெஸ்ட்டில் வென்றால்தான்  டெஸ்ட் தொடரை சமன் செய்ய முடியும் என்பதால்  பாக்  வெற்றிக்கு வேகம் காட்டும். அதனால் இன்று தொடங்கும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>