×

சேலம், ஈரோடு, கோவையில் போலியான பெயரில் பயோ டீசல் விற்பனை

சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆயில் கம்பெனிகளின் மாநில அளவிலான ஒருங்கிணைப்பாளர் சார்பில் இந்தியன் ஆயில் தெற்கு மண்டல தலைமை பொதுமேலாளர் சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் பயோடீசல் என்கிற பெயரில், மோசமான, போலியான வாகன எரிபொருளை விற்பனை செய்யும் சில சப்ளையர்கள், சமீப காலத்தில் பெருகி வருகின்றனர்.

இது, இந்தியாவில் பி.எஸ்-VI தூய்மையான மோட்டார் வாகன எரிபொருள்களை வழங்கி சுற்றுச்சூழலைத் தூய்மையாகப் பாதுகாக்கும் முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளன. சேலம், நாமக்கல், சங்ககிரி, தூத்துக்குடி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய மார்க்கெட்களில், இந்த போலி தயாரிப்புகள், சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படுகிறது. . மேலும் போலி தயாரிப்புகளால் பொது மக்களின் உடல்நலன் பாதிக்கப்படுவதுடன், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

Tags : Salem ,Erode ,Coimbatore , Salem, Erode, Coimbatore, Biodiesel, for sale
× RELATED கைதிகளுக்கு நூலகம் திறப்பு