×

ஐஐடி தொழில் நுட்பத்தில் திருவள்ளூரில் மண்பாண்ட ஆலை

சென்னை: சென்னையை அடுத்த திருவள்ளூர் மாவட்டம் பெருமுடிவாக்கம் கிராமத்தில் மண்பாண்ட தயாரிப்புக்காக ஒரு பொது ஆலையை உருவாக்க சென்னை ஐஐடி உதவியுள்ளது. அதன்படி, சென்னை ஐஐடியின் தொழில் நுட்ப செயற்பாட்டு குழுவின் மூலம் தொழில் நுட்பங்களை கொண்டு மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிதியுதவியுடன், நாகர்கோவிலில் உள்ள அரசு சாரா அமைப்பின் சமூக மேம்பாட்டு மையம், கொல்கத்தாவை சேர்ந்த ஒன்றிய கண்ணாடி மற்றும் பீங்கான் நிறுவனம் ஆகியவை இணைந்து சென்னை ஐஐடியின் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தற்போதைய தேவைக்கான மண்பாண்டங்களை தயாரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளன.

இதன்படி, நுண்ணலை அடுப்பில்( மைக்ரோவேவ்) பயன்படுத்தக் தக்க களிமண் பாத்திரங்கள், பல்வகைக் கலைப் பொருட்கள், சமையல் பாத்திரங்கள், சேமிப்பு கொள்கலன்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தயாரிப்புக்காக பொது ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஆலையின் மூலம், மண்பாண்ட தொழிலாளர்களின் வருவாய் 3 மடங்கில் இருந்து 4 மடங்காக உயரும். பாரம்பரிய மண்பாண்ட பொருட்களுடன் ஒப்பிடுகையில் இந்த ஒருங்கிணைந்த தொழில் நுட்பம் மூலம் நான்கு மடங்கு சந்தை மதிப்பு கூடும். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு இது  குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன், வழிகாட்டல் மூலம் தொழில் முனைவோராகவும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் உள்ள மற்ற மண்பாண்ட தொழில் மையங்களிலும் இந்த முறை அறிமுகப் படுத்தப்படும்.

Tags : Tiruvallur , IIT, Technology, Pottery
× RELATED திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற...