சர்வதேச கபடி ேபாட்டிக்கு தேர்வான வீரர்கள் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: தேசிய அளவில் கபடி விளையாட்டு போட்டியில் தங்கம் வென்று, நேபாளத்தில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள செல்லும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கபடி வீரர்கள் சிலம்பரசன், சதீஸ், சுரேஸ்குமார், கணேஷ்பாபு, மணிகண்டன் முதல்வர் மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், நேற்று மாலை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, ராமநாதபுரம் மாவட்டக் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம், தலைமை நிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>