புளியந்தோப்பில் தரமற்ற குடியிருப்பு கட்டியவர்கள் மீது நடவடிக்கை: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: சென்னை புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை வெளியேற்றி, சுமார் 250 கோடி மதிப்பில் 1,900 வீடுகள் கொண்ட 9 அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்நிலையில் கட்டி முடிக்கப்பட்ட ஓராண்டுக்குள்ளேயே அந்த அடுக்குமாடி குடியிருப்பின் சுவர்கள், லிப்ட், மின்சாரம், குடிநீர் குழாய்கள் என அனைத்தும் சிதலமடைந்து காணப்படுவதாகவும், வீட்டு சுவர்கள் தொட்டாலே பெயர்ந்து கொட்டுவதாகவும் குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதன் உண்மை நிலையை கண்டறிய தமிழக அரசு சிறப்பு குழு ஒன்றை அமைத்து, தரமற்ற குடியிருப்புகளை கண்டறிந்து அதை கட்டியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories:

>