×

அரியலூரில் 14 ஆண்டாக மூடிக்கிடந்த உழவர் சந்தை மீண்டும் செயல்பட துவங்கியது: பொதுமக்கள் மகிழ்ச்சி

அரியலூர்: அரியலூரில் 14 ஆண்டாக மூடிக்கிடந்த உழவர் சந்தை மீண்டும் செயல்பட துவங்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.அரியலூரில் உழவர் சந்தை கடந்த 2000ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. 50 கடைகளுடன் செயல்பட தொடங்கிய இந்த உழவர்சந்தையில், நாட்டு காய்கறிகள் பசுமையாக கிடைத்ததால் பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி சென்றதால் தொடர்ந்து 5 ஆண்டுகள் நல்ல நிலையில் இயங்கியது.2016ம் ஆண்டிற்கு பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அரசு போதிய கவனம் செலுத்தாததால் உழவர் சந்தைக்கு வரும் காய்கறிகள் வரத்து குறைந்தது. இதனால் பொதுமக்கள் அதிக அளவில் வரவில்லை. இதனால் உழவர்சந்தை மூடப்பட்டது. கடந்த 14 ஆண்டுகள் செயல்படாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கில் ஒரு மாதம் உழவர் சந்தை செயல்பட்டது. இதனை தொடர்ந்து மீண்டும் மூடப்பட்டது.

தற்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் நலன் காக்க மீண்டும் உழவர் சந்தைகள் செயல்பட தொடங்கும் என்று அறிவித்தார். இதனையடுத்து உழவர் சந்தையை சீரமைத்த அதிகாரிகள் நேற்று முதல் மீண்டும் செயல்பட்டிற்கு கொண்டு வந்தனர்.உழவர் சந்தையில் உள்ள 50 கடைகளில் 25 கடைகளில் கீரை, பழங்கள், கருவாடு, காய்கறிகள் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு கடையிலும் சரியான எடைக்காக அதிகாரிகளே எடை இயந்திரம் மற்றும் எடைக்கல் தந்துள்ளனர். இதனால் வியாபாரிகளுக்கு சிரமம் இல்லாமல் உள்ளது.இதுகுறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் பிச்சை கூறியதாவது:வெளியில் உள்ள கடைகளின் விலையைவிட 20 சதவீதம் குறைந்த விலைக்கும். காலை 6 முதல் 11 வரை விற்பனைக்கு கடைகள் திறந்திருக்கும். எனவே காய்கறிகளை அரியலூர் மக்கள் வாங்கி பயனடைய வேண்டும் என்றார். விரைவில் 50 கடைகளிலும் காய்கறிகள் விற்பனை நடைபெறும் என்பதால் பொதுமக்களுக்கு மீண்டும் பயன்தரும் என்று உழவர் சந்தையாக மாறும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

Tags : Ariyalur , Farmers' market in Ariyalur, which had been closed for 14 years, is back in operation: Public Happiness
× RELATED விவசாயி கொலை வழக்கில் தந்தை, மகனுக்கு 10 ஆண்டு சிறை