திருமங்கலம் அருகே கழிவுகள் எரிப்பால் விளைநிலங்கள் பாதிப்பு

திருமங்கலம்: திருமங்கலம்  கப்பலூர் பகுதியில் உள்ள நிறுவனங்கள் தங்களது பழைய கழிவு பொருட்கள்,  டயர்கள் உள்ளிட்டவற்றை உச்சப்பட்டி தோப்பூர் வீட்டுவசதி வாரியத்தில் கொட்டி  அவற்றை தீயிட்டு வருகின்றனர். கழிவு பொருட்கள் என்பதால் தீ மளமளவென பற்றி  எரிந்து கரும்புகையுடன் சுற்றுசூழலை மாசுபடுத்தி வருகிறது.

மேலும் இந்த  பகுதிகளில் விவசாயிகள் தோட்டங்களில் பயிரிட்டுள்ள வாழை, தேக்கு, மா  உள்ளிட்ட மரக்கன்றுகளும் தீயினால் கருகி வருகின்றன. ஒரு முறை எரியூட்டினால்  தொடர்ந்து 6 மணிநேரம் வரை தீ தொடர்ந்து எரிவதால் விவசாயமும்  பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதுகுறித்து வருவாய், காவல்துறை, ஊராட்சி  நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Related Stories:

>