×

ரத்தக்களறியை தவிர்க்கவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கம்

அபுதாபி: ரத்தக்களறியை தவிர்க்கவே ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியதாக முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி விளக்கமளித்துள்ளார். பொருட்கள், பணத்தை எடுத்து சென்றதாக தலிபான்கள் கூறியதற்கும் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி மறுப்பு தெரிவித்துள்ளார். விரைவில் நாடு திரும்ப உத்தேசிப்பதாகவும் ஆப்கானிஸ்தான் மக்களுடன் பேசவிருப்பதாகவும் அஷ்ரப் கனி விளக்கமளித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஆப்கானில் நுழைந்த அமெரிக்க படைகள் கிட்டதிட்ட 20 ஆண்டுகளுக்கு பின் வெளியேறி வருகின்றன. மத அடிப்படைவாத குழுக்களான தலிபான்கள், ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானை கைப்பற்றி உள்ளனர். காபூல் முற்றுகையிடப்பட்டதை அறிந்த அதிபர் அஷ்பர் கனி அங்கிருந்து விமானம் மூலம் தப்பி தஜிகிஸ்தான் செல்ல முயன்றார். அவர் காபூலில் இருந்து நான்கு கார்கள் நிறைய பணம் மற்றும் ஒரு ஹெலிகாப்டருடன் சென்றார்.

அவரது விமானம் தரையிறங்க தஜிகிஸ்தான் அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து அவர் ஓமனுக்கு சென்றதாக தகவல்கள் வெளியானது. இருப்பினும் அவர் எங்கே இருக்கிறார்? என்பது குறித்த முழு விவரம் இதுவரை வெளியாகாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அதிபராக இருந்த அஷ்ரப் கனி அபுதாபியில் உள்ளதாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் அஷ்ரப் கனி மற்றும் அவரது குடும்பத்தாரை அனுமதிப்பாக UAE விளக்கம் அளித்துள்ளது.

Tags : Former President ,Ashrab Gani ,Afghanistan , Ashraf Gani
× RELATED மருத்துவமனையில் முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் அனுமதி..!