அரசு நிலத்திற்கு போலி பட்டா வட்டாட்சியர், எஸ்ஐ உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிய உத்தரவு: ஆண்டிபட்டி கோர்ட் அதிரடி

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (43). இவரிடம் சின்னமனூரை சேர்ந்த ராஜா என்ற நில புரோக்கர் கடந்த 2018ல் அரசு குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடத்தை குறைந்த விலைக்கு வாங்கி தருவதாக கூறி ரூ.70 லட்சம் வரை  பெற்றுள்ளார். இதில் அப்போதைய கலெக்டர் அலுவலக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர், ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் மூலம் உமா மகேஸ்வரிக்கு போலி பட்டா தயார் செய்து கொடுத்ததாகவும், அந்த இடத்தை பத்திர பதிவு செய்ய அப்போதைய ஆண்டிபட்டி சார் பதிவாளர் பல லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

போலியாக பட்டா தயார் செய்ததாகவும், பணம் வாங்கிக்கொண்டு பத்திரம் பதிவு செய்யவில்லை என்றும், உமாமகேஸ்வரி ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இதனை விசாரித்த மாஜிஸ்திரேட் மகேந்திரா வர்மா, சம்பந்தப்பட்ட 15 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் ஆண்டிபட்டி போலீசார் புரோக்கர் ராஜா (40), அவருடைய மனைவி ரேவதி, கலெக்டர் அலுவலக உதவியாளர் தங்கபாண்டி (35), ஆண்டிபட்டி தாலுகா அலுவலக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் சதீஷ் (30), அப்போதைய ஆண்டிபட்டி துணை வட்டாட்சியர் அப்துல் நசீர், அப்போதைய ஆண்டிபட்டி சார்-பதிவாளர் உஷாராணி, அப்போதைய சின்னமனூர் எஸ்ஐ மாயன், அப்போதைய சின்னமனூர் எஸ்ஐ ஜெய்கணேஷ் (தற்போது திண்டுக்கல் தாலுகா போலீஸ் நிலையத்தில் உள்ளார்) உள்ளிட்ட 15 பேர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>