×

ரூ.192 கோடியில் வீடு கட்டும் திட்டம் வெங்கையா நாயுடு நிராகரிக்க வேண்டும்: ப.சிதம்பரம் வேண்டுகோள்

புதுடெல்லி: டெல்லியில் நாடாளுமன்றத்துக்கு புதிய முக்கோண வடிவ கட்டிடம், பிரதமர் மற்றும் துணை ஜனாதிபதிக்கு புதிய இல்லங்கள், ராஜபாதையை சீரமைப்பது ஆகிய பணிகளை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா மறுமேம்பாட்டு திட்டத்தை ஒன்றிய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், துணை ஜனாதிபதிக்கு மட்டுமே ரூ.192 கோடி செலவில் வீடு கட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டங்களை நிறுத்தி வைக்கும்படி காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இது மக்கள் பணத்தை வீணடிக்கும் திட்டம் என்றும் விமர்சித்து வருகிறது.

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘இந்தியாவில் சிக்கனம் என்பது உயர்ந்த இடங்களில் கண்காணிப்பு வார்த்தையாக இருக்க வேண்டும், ஆனால், ரூ.192 கோடியில் துணை ஜனாதிபதிக்கு இல்லம் கட்டுவது வெறுப்ைப ஏற்படுத்தக்கூடிய ஒன்றாகும். துணை ஜனாதிபதியாக வெங்கையா நாயுடு இருக்கும் வரை இந்த திட்டத்தை புறக்கணிக்க வேண்டும். இது, பொதுமக்கள் பணத்தை வீணடிக்கும் மற்றொரு திட்டமாகும். வீண் பெருமை அழியட்டும், நல்லறிவு மேலோங்கட்டும்,’ என கூறியுள்ளார்.

Tags : Venkaiah Naidu ,P. Chidambaram , Housing project, Venkaiah Naidu, P. Chidambaram
× RELATED பாஜக அரசு ஏழைகளுக்கான அரசு அல்ல;...