ஜம்முவில் பிரிவினைவாத தலைவர்கள் 4 பேர் கைது

ஸ்ரீநகர்:  பாகிஸ்தான் எம்பிபிஎஸ் இடங்களை விற்று வந்த பணத்தில் தீவிரவாத அமைப்புக்களுக்கு நிதியுதவி செய்ததாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பிரிவினைவாத அமைப்பின் தலைவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானை சேர்ந்த சில கல்வி நிறுவனங்களுடன் பிரிவினைவாத தலைவர்கள் தொடர்பு வைத்துக் கொண்டு, பாகிஸ்தானில் எம்பிபிஎஸ் இடங்களை பணத்தை பெற்றுக் கொண்டு ஜம்மு காஷ்மீர் மாணவர்களுக்கு விற்றுள்ளனர்.  இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஜம்மு காஷ்மீரின் சிஐடி போலீசார், நுண்ணறிவு பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். சட்ட விரோத நடவடிக்கை தடுப்பு சட்டம், பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையில், பெற்றோர், மாணவர்களிடம் இருந்து வசூலித்த பணத்தில் ஒரு பகுதியை தீவிரவாதத்துக்கு நிதி ஆதரவு மற்றும் பல்வேறு வழிகளில் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்கு பயன்படுத்தி வந்தது உறுதியானது. மேலும், கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் நெருங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு தான் பெரும்பாலும், எம்பிபிஎஸ், பல்வேறு கல்லூரிகளில் இடங்கள் பெற்று கொடுக்கப்பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து ஹூரியத் மாநாடு அமைப்பை சேர்ந்தவர் உட்பட பிரிவினைவாத தலைவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

More
>