உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப்பில் அசத்தல்

கென்யா தலைநகர் நைரோபியில் நேற்று தொடங்கிய உலக யு-20 தடகள சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய குழுவினர் நம்பிக்கை அளிக்கும் வகையில் செயல்பட்டு அசத்தி வருகின்றனர். மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் களமிறங்கிய பிரியா மோகன் 53.79 விநாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து பைனலுக்கு தகுதி பெற்றார். ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியாவின் அமன்தீப் தலிவால் 17.92 மீட்டர் தூரம் எறிந்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். கலப்பு 4X400 மீ. தொடர் ஓட்டத்திலும் இந்திய அணி புதிய போட்டி சாதனையுடன் (3:23.36) பைனலுக்கு முன்னேறி பதக்க நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>