×

வல்லம் குடோனிலிருந்து கன்டெய்னர் லாரியில் எடுத்துசென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான டயர்கள் கடத்தல்: 6 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் உள்ள குடோனில் இருந்து கன்டெய்னர் லாரியில் எடுத்துச்சென்ற ரூ.30 லட்சம் மதிப்பிலான டயர்கள் கடத்தப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 6 பேரை கைது செய்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வல்லம் சிப்காட் பகுதியில் தனியார் டயர் தயாரிக்கும் குடோன் உள்ளது. இந்த குடோனில் கடந்த சில தினங்களுக்கு முன்பு போலியான ஆதாரங்களை வைத்து கொடோனில் இருந்து கன்டெய்னர் லாரியில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான 105 லாரி டயர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 105 டயர்கள் கடத்தபட்டுள்ளது தெரியவந்தது.

இதனையடுத்து குடோன் நிர்வாக மேலாளர் சந்தோஷ் (50), ஒரகடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்படி ஸ்ரீபெரும்புதூர் டி.எஸ்.பி. மணிகண்டன் மேற்பார்வையில் 2 தனிப்படை அமைத்து  தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ஒரகடம் குடோனில் வேலை செய்யும், ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த பிரேம் (26) மற்றும் அவரது நண்பர்களான ஆத்தனஞ்சேரி பகுதியை சேர்ந்த லியோ பவுல் ராஜ் (38), நல்லாம்பெரும்பேடு பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் (30) ஆகிய 3 பேரும் சேர்ந்து, மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் ரஹீம் மூலமாக டயர்களை கடத்தியது தெரிய வந்தது.

பின்னர் கடத்தப்பட்ட டயர்களை, வேலூர் அருகே ஆரன்பாளையம் பகுதியை சேர்ந்த ஜாபர் அலி (51), ராணிபேட் அடுத்த நாவல்பூர் பகுதியை சேர்ந்த தஸ்தகீர்(36) ஆகிய இரண்டு பேரிடம் விற்பனை செய்துள்ளனர்.  மேற்கண்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் வல்லம் குடோனில் வேலை செய்த லியோ பவுல்ராஜ் தன்னுடைய மைத்துனர் பிரேம் மற்றும் லிங்கேஸ்வரன் மூலம் கடத்தி டிரைவர் ரஹீமிடம் ராணிப்பேட்டையில் விற்க கூறியுள்ளனர். சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள டயர்களை வாங்கிய ஜாபர், தஸ்தகீர் ஆகியோர் உட்பட ஆறு பேரை ஒரகடம் காவல்துறையினர் கைது செய்து டயர்களை கைப்பற்றி பறிமுதல் செய்தனர்.

மேலும் விசாரணையில்  சில வருடங்களுக்கு முன்பு இதே குடோனிலிருந்து  750 டயர்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. அங்கு வேலை செய்த லியோ பவுல்ராஜ் அப்போது பணியிலிருந்து நீக்கப்பட்டார். இவருடைய மைத்துனர் பிரேம் அதே குடோனில் வேலை செய்து வருகிறார். அதனால் 105 டயர்கள் மீண்டும் தற்போது கடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Vallam Gudoni , Vallam Gudon, container truck, tires smuggling, arrest
× RELATED சிறுமியை கடத்திய கண்டக்டர் கைது: ரயிலில் மடக்கிய போலீஸ்