×

முதலமைச்சரின் இலவச தொகுப்பு வீடுகள் கட்ட பழங்குடியினர் 59 பேருக்கு அரசாணை: காஞ்சி எம்பி செல்வம் வழங்கினார்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள பழங்குடியின மக்கள் 59 பேருக்கு முதலமைச்சரின் இலவச தொகுப்பு வீடுகளை கட்டுவதற்கான அரசாணையினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற எம்பி ஜி.செல்வம் வழங்கினார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள கிராமப்புறங்களில் வீடுகள் இன்றி கூரை வீடுகளில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் 59 பேருக்கு, தலா ரூ.3 லட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் இலவச தொகுப்பு வீடு வழங்கும் நிகழ்ச்சி அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.  இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்  மாலதி தலைமை தாங்கினார்.  கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமுத்து அனைவரையும் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான அரசாணையை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஒரத்தி கண்ணன், செண்டிவக்கம் தம்பு, மாவட்ட பொருளாளர் கோகுலகண்ணன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், ஒன்றிய துணை செயலாளர்கள் பேக்கரி ரமேஷ், ரத்தினவேலு, நிர்வாகிகள் சிவபெருமான், கண்ணதாசன், பிரபாகரன். வேதாச்சலம்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : Kanchi ,Chief Minister , Chief, free package house, tribals
× RELATED கருடன் கருணை