போலீசை கத்தியால் குத்திய போதை ஆசாமி கைது

புழல்:  செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே முககவசம் அணியாதவர்களை நாரவாரிக்குப்பம் பேரூராட்சி சார்பில் சுகாதார ஆய்வாளர் மதியழகன் நேற்று மதியம் சோதனை செய்து அபராதம் விதித்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல் போதையில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி சுகாதார ஆய்வாளர் விசாரித்துள்ளார். அப்போது அந்த போதை ஆசாமி அவரை மிரட்டி உள்ளார்.

அப்போது, அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த செங்குன்றம் காவல் நிலைய காவலர் பார்த்திபன் மிரட்டலில் ஈடுபட்ட போதை ஆசாமியை தடுத்துள்ளார். இதில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலரின் வலது தொடையில் குத்தி விட்டு தப்பி சென்றார். இது குறித்து தகவல் அறிந்த வந்த போலீசார்  பார்த்திபனை பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய நாரவாரிகுப்பம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த மணிவண்ணனை (48) கைது செய்தனர்.   

Related Stories:

>