முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு உண்டியல் சேமிப்பு தொகையினை வழங்கிய சிறுவர்களுக்கு சைக்கிள்: எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் உள்ள பல்வேறு நலச்சங்கங்களின் சார்பிலும், பூண்டி ஒன்றியம் ராமஞ்சேரி கிராமத்தை சேர்ந்த எஸ்.ஜஸ்வந்த், கடம்பத்தூர் மேற்கு ஒன்றியம் பண்ணூர் கிராமத்தை  சேர்ந்த ரோகித் ஆகிய சிறுவர்களும் தங்களது உண்டியல் சேமிப்பு பணத்தையும் தமிழக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்காக திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரனிடம் நிதி வழங்கினர்.  மாநில இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின் இல்லத்தில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ நேரில் சந்தித்து ரூ.50 ஆயிரத்தை ஒப்படைத்தார்.

மேலும் உண்டியல் சேமிப்பு பணத்தை வழங்கிய 2 சிறுவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ இரண்டு சைக்கிள்களை பரிசாக வழங்கினார். இதில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தா.மோதிலால், பூண்டி ஒன்றிய துணை பெருந்தலைவர் மகாலட்சுமி மோதிலால், ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா ரமேஷ், காஞ்சிப்பாடி பி.சரவணன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>