திருவள்ளூர் ஒன்றிய குழு கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் அலுவலகத்தில் உள்ள மன்ற கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லாகான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சி.காந்திமதிநாதன், இரா.வெங்கடேசன், மேலாளர் ச.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் இந்திரா பொன்.குணசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் த.எத்திராஜ், எஸ்.வேலு, கே.விமலாகுமார், ஜா.செல்வராணி ஜான், எல்.சரத்பாபு, டி.கே.பூவண்ணன், டி.சாந்தி தரணி, வழக்கறிஞர் வ.ஹரி, ஆர்.திலீப்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு கொண்டனர். கூட்டத்தில் ஒன்றியம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது, குடிநீர் பிரச்னைகளை நிறைவேற்றித் தருவது தெருவிளக்கு வசதியை ஏற்படுத்தித் தருவது உள்பட அடிப்படை வசதிகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related Stories:

>