அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் படத்திறப்பு: இபிஎஸ், ஓபிஎஸ் பங்கேற்பு

சென்னை: அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் கடந்த 5ம் தேதி உடல் நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். அவருடைய உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். மேலும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.  இந்நிலையில், மதுசூதனனின் படத் திறப்பு நிகழ்ச்சி நேற்று மாலை வண்ணாரப்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டு மதுசூதனன் படத்தை திறந்து வைத்தனர். பின்னர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர்கள் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: