கோயில் சொத்து ஆக்கிரமிப்பை கண்டறிய 150 நில அளவையர் நியமனம்: உயரதிகாரி தகவல்

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள், குடியிருப்புகள் உள்ளன. இந்த சொத்துகள் தொடர்பாக உரிய கால இடைவெளியில் ஆய்வு நடத்த வேண்டும். இந்த சொத்துக்களில் ஆக்கிரமிப்புகளோ, திருத்தங்களோ அல்லது வேறு வகை மாற்றங்களோ செய்திருப்பது கண்டறியப்பட்டால் உடனடியாக சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்கப்படுகிறது. இந்த பணிகளை மேற்கொள்வதற்கு வசதியாக ஒவ்வொரு ஆண்டும் நில அளவையர் கொண்ட குழுக்களை கோயில் நிர்வாக அதிகாரிகள் ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அவர்கள் உரிய கால இடைவெளியில் ஆய்வு செய்து அறிக்கைகளை அளிக்க வேண்டும்.

இந்நிலையில் ஆணையர் குமரகுருபரன் கோயில் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி கோயில்களின் சொத்துக்களை பொறுத்தவரை ஒவ்வொரு குழுக்களாக அதாவது, 3 முதல் 5 கோயில்கள் வரை தனிக்குழுவாக ஏற்படுத்தி, அந்த கோயில்களின் சொத்துக்களை சேர்த்து ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுக்களில் ஒன்று முதல் 2 நில அளவையர்களை நியமனம் செய்து சொத்துக்களை அளவீடு செய்யும் பணி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. இவர்கள் மூலம் கோயில் சொத்துக்களை கண்டறிந்து நில அளவீடு செய்யும் பணியில் ஈடுபட உள்ளனர். இந்த நிலையில், அறநிலையத்துறைக்கு அங்கீகாரம் பெற்ற 150 நில அளவையர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது.

Related Stories:

>