இரவில் இருளில் மூழ்கிய பண்ருட்டி ரயில்வே மேம்பாலம்: மின் விளக்குகளை பழுதுபார்க்க பொதுமக்கள் கோரிக்கை

பண்ருட்டி: பண்ருட்டி சென்னை சாலை மேம்பாலத்தில் ஒரு மாதங்களுக்கு மேலாக பாலத்தின் மேலே உள்ள மின் விளக்குகள் இரவில் எரியாமல் உள்ளது. இந்த பாலத்தின் பாதிப் பகுதி பண்ருட்டி நகராட்சியும், பாதிப்பகுதி லட்சுமி நாராயணபுரம் (எல்.என்புரம்) ஊராட்சியை சார்ந்ததாக இருக்கிறது. எனவே பாலத்தின் மேலேயும், கீழேயும், சர்வீஸ் சாலையிலும் மின் விளக்குகள் எரியாமல் இரவு நேரத்தில் இருட்டாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பாலத்தின் கீழே உள்ள  கடை வியாபாரிகளின் வியாபாரமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் மத்தியில் திருட்டு பயம் அதிகரித்துள்ளது. இதனைத் தடுக்கும் பொருட்டு ஊராட்சி மற்றும் நகராட்சி நிர்வாக அதிகாரிகள் தலையிட்டு இந்த மேம்பாலத்தில் உள்ள மின் விளக்குகளை  போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும் என்று பொது மக்களும் வியாபாரிகளாகவும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: