நீதிமன்ற உத்தரவின்படியே அர்ச்சகர்கள் நியமனம்: அறநிலையத்துறை தகவல்

சென்னை: ஆகம விதிகளுக்கு முரணாக அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவதாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் காலியிடங்களை நிரப்ப வேண்டுமென்ற உயர் நீதிமன்ற உத்தரவினை பின்பற்றியே நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டது என அறநிலையத்துறை தரப்பில் பதில் அளிக்கபப்ட்டது. அர்ச்சகர்களை நியமிப்பதற்கான தகுதிகள் குறித்து உயர்மட்ட குழு பரிந்துரை அடிப்படையிலேயே அடிப்படை கல்வித் தகுதியுடன் ஒரு வருட பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>